சாலை சீர்செய்யப்படுமா?

Update: 2025-09-07 06:13 GMT

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் வட்டம் பையம்பாடி கிராமத்தில் சுமார் 150-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இங்கு அமைக்கப்பட்டிருந்த தார் சாலை முழுவதுமாக சேதமடைந்து குண்டும் குழியுமாக காணப்படுகிறது. இதன் வழியாக செல்லும் பொதுமக்கள் மிகவும் அவதி அடைகிறார்கள். மேலும் அவசர தேவைக்கு ஆம்புலன்சு வருவதற்கு கூட மிகவும் சிரமமாக உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் தார் சாலையை சரிசெய்ய உடனடி நடவடிக்கை எடுக்கவேண்டும்.


மேலும் செய்திகள்