திருவள்ளூர் மாவட்டம் புழல் காவாங்கரை திருநீலகண்டன் நகர் 5-வது தெருவில் உள்ள சாலையை பள்ளி-கல்லூரி செல்லும் மாணவர்கள், வேலைக்கு செல்வோர்கள் என பலதரப்பட்டோர் பயன்படுத்துகிறார்கள். இந்த சாலையில் பாதாளச்சாக்கடை பணி நடைபெற்று முடிந்து 2 வாரங்கள் ஆகியும் தோண்டிய சாலை சீரமைக்கப்படாமல் சேறும் சகதியுமாக உள்ளது. இதனால் இந்த வழியாக செல்பவர்கள் அனைவரும் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகிறார்கள். மேலும் விபத்துகளும் ஏற்படுகிறது. எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் சாலையை சீரமைக்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.