ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடியில் உள்ள சில சாலைகள் சேதம் அடைந்து குண்டும், குழியுமாக மோசமான நிலையில் உள்ளது. இதனால் அப்பகுதியில் பயணிக்கும் வாகன ஓட்டிகள் மற்றும் நடந்து செல்லும் பொதுமக்கள் மிகவும் சிரமம் அடைந்து வருகின்றனர். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சேதமடைந்த சாலைகளை சீரமைப்பார்களா?