புதுக்கோட்டை மாவட்டம் ஆதனக்கோட்டை அருகே கணபதிபுரம் கிராமம் ஆதிதிராவிடர் காலனியில் கந்தர்வகோட்டை செல்லும் சாலையில் உயர்மின் கோபுர விளக்கு உள்ளது. இந்த உயர்மின் கோபுர விளக்கு கடந்த 6 மாதங்களுக்கு மேலாக எரியாமல் உள்ளதால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகளும், பாதசாரிகளும், குடியிருப்பு வாசிகளும் மிகுந்த சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். ஆதிதிராவிடர் காலனி குடியிருப்பு பகுதியில் கந்தர்வகோட்டை செல்லும் சாலையுடன் பல சந்திப்பு சாலைகள் இனைவதால் இரவு நேரங்களில் போதிய வெளிச்சமின்றி அடிக்கடி விபத்துகள் ஏற்படுகிறது. எனவே விபத்துகளை தடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து இந்த உயர்மின் கோபுர விளக்கினை சரிசெய்ய வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.