கோத்தகிரி பகுதியில் குடிநீர் திட்ட பணிகளுக்காக சாலைகள் பல இடங்களில் தோண்டப்பட்டு குண்டும், குழியுமாக கிடக்கின்றன. அந்த பணிகள் முடிந்து மாதக்கணக்கில் ஆகியும் சாலைகள் சீரமைக்கப்படவில்லை. இதனால் அந்த வழியாக சென்று வரும் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் கடும் அவதிப்பட்டு வருகிறார்கள். சில நேரங்களில் விபத்துகளும் ஏற்பட்டு வருகின்றன. இதுகுறித்து பலமுறை அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும் இதுவரை உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்ைல. எனவே அந்த சாலைகளை சீரமைக்க அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.