செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம், எலப்பாக்கம் கிராமத்தில் உள்ள பொதுமக்கள் பஜார் வீதியில் இருந்து நூலகம் செல்வதற்கு மண்பாதையை பொதுவழியாக பயன்படுத்தி வருகிறார்கள். வாகன ஓட்டிகளுக்கு மிகவும் சிரமமாக உள்ள இந்த மண்பாதை, மழைக்காலங்களில் விபத்துகள் அதிகமாக ஏற்படுத்துகிறது. மேலும் அந்த பாதையில் செடி,கொடிகள் அடர்ந்து காணப்படுவதால் இரவு நேரங்களில் விஷ பூச்சிகளின் நடமாட்டமும் அதிகமாக உள்ளது. எனவே சம்பந்தப்பட்டதுறை அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து அங்கு தார்சாலை அமைக்க வேண்டும்.