குண்டும் குழியுமான சாலை

Update: 2025-08-24 13:53 GMT

திருவள்ளூர் மாவட்டம் திருவாலங்காடு ஒன்றியம் ராமாபுரம் கிராமத்தில் 100-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகிறார்கள். இந்த கிராமத்துக்கு தக்கோலம் நெடுஞ்சாலையில் இருந்து வர தார் சாலை உள்ளது. இந்த சாலை குண்டும் குழியுமாக பல்லாங்குழியாக காட்சியளிக்கிறது. இதனால் சாலையை பயன்படுத்தும் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகுகிறார்கள். எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் இந்த சாலையை சீரமைக்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.


மேலும் செய்திகள்