சாலை சீரமைக்கப்படுமா?

Update: 2025-08-24 12:36 GMT

துடியலூரில் இருந்து சரவணம்பட்டி செல்லும் சாலையில் வெள்ளக்கிணறு பஸ் நிறுத்தம் உள்ளது. இதன் அருகே சாலையின் குறுக்கே ஏதோ ஒரு பணிக்காக நீளவாக்கில் குழி தோண்டினர். அந்த பணியை முடித்துவிட்டு குழியை சரிவர மூடவில்லை. அத்துடன் சாலையையும் சீரமைக்கவில்லை. இதனால் அந்த வழியாக சென்று வரும் இருசக்கர வாகன ஓட்டிகள் நிலைதடுமாறி விழுந்து காயம் அடைந்து வருகின்றனர். எனவே உடனடியாக அந்த குழியை மூடி சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்