வேகத்தடைக்கு வர்ணம் பூச வேண்டும்

Update: 2025-08-24 11:00 GMT

அரியலூர் மாவட்டம் கீழப்பழுவூர் பஸ் நிலையத்திற்கு வெளியே வேகத்தடை ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இந்த வேகத்தடை மீது பூசப்பட்டிருந்த வெள்ளை வர்ணம் தற்போது மங்கிய நிலையில் உள்ளது. இதனால் வேகத்தடை இருப்பது தெரியாமல் அதில் வாகன ஓட்டிகள் தங்களது வாகனங்களை விட்டு நிலைதடுமாறி கீழே விழுந்து வருகின்றனர். மேலும் இரவு நேரங்களிலும் வேகத்தடை இருப்பது முறையாக தெரிவதில்லை. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுதொடர்பாக நடவடிக்கை எடுத்து வேகத்தடைக்கு வெள்ளை வர்ணம் பூச வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்