அரியலூர் மாவட்டம் வி.கைகாட்டியில் தனியார் சிமெண்டு ஆலை உள்ளது. இந்த ஆலைக்குச் செல்லும் முத்துவாஞ்சேரி சாலையில், வி.கைகாட்டி பேருந்து நிலையத்தில் இருந்து தனியார் சிமெண்டு ஆலை வரை சாலையின் இரண்டு பக்கங்களிலும் எப்பொழுதும் லாரிகள் நிறுத்தப்பட்டுள்ளன. இதனால் அவ்வழியாக இருசக்கர, நான்கு சக்கர மற்றும் கனரக வாகனங்களில் செல்வோர் ஒதுங்கிச் செல்ல முடியாமல் மிகவும் சிரமம் அடைந்து வருகின்றனர். மேலும் இதனால் அடிக்கடி விபத்துகளும் ஏற்படுகின்றன. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுகுறித்து விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.