சாய்ந்துள்ள அறிவிப்பு பலகைகள்

Update: 2025-08-24 10:59 GMT

அரியலூர் மாவட்டம் ரெட்டிபாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட மு.புத்தூர், முனியங்குறிச்சி கிராமங்களின் முதன்மை சாலை வழியாக தினமும் எண்ணற்ற வாகனங்கள் சென்று வருகின்றன. இந்த சாலை பழுதடைந்து போக்குவரத்துக்கு லாயக்கற்ற நிலையில் இருந்தது. இந்நிலையில் இந்த சாலையில் சுமார் 2 கி.மீ தூரத்திற்கு நெடுஞ்சாலை துறையினரால் சீரமைக்கப்பட்டு, சாலையில் ஆங்காங்கே அறிவிப்பு பலகைகளை பெயரளவிற்கு சாலையின் ஓரத்தில் ஆழமாக வைக்காமல் மேம்போக்காக வைத்துவிட்டனர். தற்போது மழைக்காலம் என்பதால் அங்கு வைக்கப்பட்டிருந்த சில அறிவிப்பு பலகைகள் சாய்ந்து எப்போது வேண்டுமானாலும் கீழே விழும் நிலையில் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட நெடுஞ்சாலை துறையினர் கீழே விழும் நிலையில் உள்ள அறிவிப்பு பலகைகளை சரிசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்