தார்சாலை அமைக்கப்படுமா?

Update: 2025-08-24 10:59 GMT

கரூர் மாவட்டம் குளத்துப்பாளையம் தேசிய நெடுஞ்சாலையில் இருந்து பெரியகோதூர் வரையுள்ள சாலை பழுதடைந்த நிலையில், பழைய தார்சாலையை உடைத்து விட்டு புதிய சாலை அமைப்பதற்காக ஜல்லிக்கற்களும், கிரஷர்மண் கலந்து கொட்டப்பட்டது. ஆறு மாதங்களாகியும் இன்னும் தார்சாலை அமைக்காததால் இருசக்கர வாகன ஓட்டிகள் இவ்வழியாக செல்லும் போது நிலைதடுமாறி கீழே விழுந்து காயமடைந்து வருகின்றனர். மேலும் சாலையில் உள்ள கிரஷர்மண் காற்றில் பறந்து வந்து கண்களில் விழுகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுகுறித்து விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்