நடவடிக்கை தேவை

Update: 2025-08-24 07:42 GMT

தேரூரில் இருந்து வெள்ளமடம் செல்லும் சாலை உள்ளது. இந்த சாலையில் சிவன்கோவில் அருகில் அமைக்கப்பட்டுள்ள பாலம் நடுவே சாலையில் கான்கிரீட் சேதமடைந்து இரும்பு கம்பிகள் வெளியே தெரிகின்றன. காலப்போக்கில் பாலம் முழுவதும் சேதமடைந்து விபத்துகள் ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனால், அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் ஒருவித அச்சத்துடனேயே சென்று வருகின்றனர். எனவே, வாகன ஓட்டிகள் நலன்கருதி பாலத்தை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-சுரேஷ் அனு, தேரூர்.

மேலும் செய்திகள்