திருவள்ளூர் மாவட்டம் மணலி புதுநகரில் உள்ள பெரும்பாலான இடங்களில் பலநாட்களாக பாதாள சாக்கடை மற்றும் மழைநீர் வடிகாலுக்கு குழாய் அமைக்கும் பணி நடைபெறுகிறது. இதனால் சாலைகளின்நிலைமை முழுவதும் மோசமாக இருக்கிறது. மேலும் வாகன ஓட்டிகள் மற்றும் பள்ளி-கல்லூரி செல்லும் மாணவ-மாணவிகள் அடிக்கடி விபத்துகளில் சிக்குகிறார்கள். இதனை கருத்தில் கொண்டு சம்பந்தப்பட்ட துறை சார்ந்த அதிகாரிகள் பணிகளை விரைந்து முடிக்கவும், பணி முடிந்த இடங்களில் புதியதாக தார் சாலை அமைக்கவும் நடவடிக்கை எடுக்கவேண்டும்.