சென்னை அரும்பாக்கம் ஸ்ரீ சக்தி நகரில் உள்ள துர்காதெருவில் நாளுக்கு நாள் தெருநாய்கள் தொல்லை அதிகரித்து கொண்டே வருகிறது. காலையிலும் மாலையிலும் நடை பயிற்சிக்கு செல்பவர்கள் இதனால் பெரிதும் பாதிக்கப்படுகிறார்கள். பாதசாரிகளை பயமுறுத்தும் அளவுக்கு கூட்டம் கூட்டமாக வந்து தொல்லை தருகிறது. மேலும் பள்ளிகள் செல்லும் சிறு குழந்தைகளும் பெரும் அவதிக்கு உள்ளாகிறார்கள். பலமுறை புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே சம்பந்தப்பட்ட மாநகராட்சி துறை அதிகாரிகள் தெருநாய் தொல்லையை சரிசெய்ய உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.