சென்னை துரைப்பாக்கம் பாலமுருகன் கார்டன் பகுதியிலுள்ள வங்கி அருகே உள்ள சாலையின் நடுவில் இரும்பு குழாய் ஒன்று பொதுமக்களுக்கு இடையூராக இருந்தது. இதனால் அந்த பகுதியில் அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டன. இதுகுறித்து 'தினத்தந்தி' புகார் பெட்டியில் செய்தி வெளியானதும் துறைசார்ந்த அதிகாரிகள் இரும்பு குழாயை அந்த பகுதியில் இருந்து உடனடியாக அப்புறப்படுத்தினர். உடனடியாக நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும், துணை நின்ற ‘தினத்தந்தி‘-க்கும் அப்பகுதி பொதுமக்கள் பாராட்டை தெரிவித்துள்ளனர்.