கரூர் மாவட்டம் வாங்கப்பாளையம் தங்கநகரில் கழிவுநீர், மழைநீர் செல்ல முடியாமல் சாலையிலேயே தேங்குவதால் இப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர். இந்நிலையில் கழிவுநீர் செல்வதற்காக கடந்த மாதம் பாலம் அமைக்கும் பணி தொடங்கி முடியும் நிலையில் உள்ளது. ஆனால் பாதையில் உள்ள மணல் அகற்றப்படாமல் குன்று போல் இருப்பதால் இந்த பாதையை கடந்து செல்ல முடியவில்லை. இதனால் இவ்வழியாக செல்லும் பள்ளி, கல்லூரி வாகனங்கள், இருசக்கர மற்றும் கனரக வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். மேலும் மாற்று பாதையும் அமைக்கப்படாமல் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுகுறித்து விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.