கரூர் மாவட்டம் புலியூரிலிருந்து வெள்ளாளப்பட்டி வழியாக சீத்தப்பட்டிக்கு செல்லும் சாலையில் கரூர்-திருச்சி தேசிய நெடுஞ்சாலை குறுக்கிடுகிறது. அந்த இடத்தில் மேம்பாலம் கட்டப்பட்டுள்ளது. இந்த நிலையில் மேம்பாலத்தின் கீழே இருபுறமும் மின்விளக்கு வசதி இல்லாததால் இரவு நேரங்களில் புலியூர்-சீத்தப்பட்டி சாலையில் பயணிக்கும் வாகன ஓட்டிகளுக்கு சமூகவிரோதிகளால் ஆபத்து ஏற்படக்கூடிய சூழ்நிலை உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து மேம்பாலத்தின் அடியில் இருபுறமும் மின்விளக்கு வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.