அரியலூர்-ஜெயங்கொண்டம் சாலையில் மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகே வேகத்தடை அமைக்கப்பட்டுள்ளது. இந்த வேகத்தடையில் பூசப்பட்ட வெள்ளை வர்ணம் முழுவதும் அழிந்து போயுள்ளது. இதனால் இரவு நேரங்களில் இந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் வேகத்தடை இருப்பது தெரியாமல் அதில் வாகனங்களை விட்டு நிலைதடுமாறி கீழே விழுந்து காயமடைந்து வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுகுறித்த விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.