வாகன ஓட்டிகள் அவதி

Update: 2025-08-10 14:56 GMT

அரியலூர்-செந்துறை சாலை வழியாக தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. இதில், செந்துறை ரவுண்டானா அருகில் ரெயில் தண்டவாளம் அமைக்கப்பட்டுள்ளது. இதற்காக சாலையின் நடுவே ரெயில்வே கேட் அமைக்கப்பட்டுள்ளது. தினமும் இந்த வழியாக செல்லும் வாகனங்கள் ரெயில்வே தண்டவாளத்தை கடந்து செல்வதில் சிக்கல் ஏற்படுகிறது. இப்பகுதியில் மட்டும் சாலை குறுகலாக காணப்படுவதால் வாகன ஓட்டிகள் போக்குவரத்து நெரிசலில் சிக்கித்தவிக்கின்றனர். மேலும், கால விரயமும் ஏற்படுகிறது. இதனால் ஆம்புலன்சு உள்ளிட்ட அவசர ஊர்தி வாகனங்கள் செல்லும் போது குறுக்கீடு ஏற்படுகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுதொடர்பாக விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்