வாகன ஓட்டிகள் அவதி

Update: 2025-08-10 12:52 GMT

கரூர் மாவட்டம் நன்செய் புகழூர் தவுட்டுப்பாளையம் பகுதியில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் கழிவுநீர் செல்லும் வகையில் கால்வாய் அமைக்கும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதற்காக சாலை ஓரத்தில் அகலமான குழி வெட்டப்பட்டுள்ளது. இந்நிலையில் இப்பணிகள் மிகவும் மந்தமாக நடைபெற்று வருகிறது. மேலும் கடந்த மூன்று மாதங்களாக இப்பணிகளை கிடப்பில் போட்டுள்ளனர். இதனால் இவ்வழியாக இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் செல்பவர்கள் கடும் சிரமம் அடைந்து வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இந்த கழிவுநீர் கால்வாய் அமைக்கும் பணியை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்