விபத்து ஏற்படும் அபாயம்

Update: 2025-08-10 12:40 GMT

கரூர் மாவட்டம், வாங்கல் தெற்கு பகுதியில், வாங்கல் காவிரி ஆற்றிலிருந்து குழாய்கள் வழியாக கரூர் பகுதிக்கு குடிநீர் கொண்டு செல்லப்படுகிறது. இந்த குடிநீர் குழாயில் ஏற்பட்ட வெடிப்பு காரணமாக தண்ணீர் வெளியேறி அந்த இடத்தில் பள்ளம் ஏற்பட்டுள்ளது. இந்த பள்ளத்தில் அந்த வழியாக இரு சக்கர வாகனத்தில் செல்பவர்கள் தடுமாறி விழுந்து படுகாயம் அடைந்துள்ளனர். மேலும் இரவு நேரங்களில் பள்ளம் இருப்பது தெரியாததால் பஸ், கார் மற்றும் கனரக வாகனங்களில் செல்வோர் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகின்றனர். எனவே அந்த பள்ளத்தை மூடி விபத்துகளை தடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்