கிடப்பில் போடப்பட்ட சாலை பணி

Update: 2025-08-03 13:00 GMT

கரூர் மாவட்டம் கடம்பங்குறிச்சி ஊராட்சி அருமைகாரன் புதூர் பகுதியில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் உள்ள சாலை குண்டும், குழியுமாக இருந்தது. இந்த சாலையை சீரமைத்து தர வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்தனர். அதன்படி சாலை அமைக்கும் பணிக்காக பழைய சாலை தோண்டப்பட்டது. அதன்பின் சாலை அமைக்கும் பணிகள் தொடங்கப்படாமல் மாதக்கணக்கில் சாலை தோண்டி போட்ட நிலையிலேயே உள்ளது. இதனால் இப்பகுதி மக்கள் இந்த சாலையை உபயோகப்படுத்த முடியாமல் மிகவும் சிரமம் அடைந்து வருகின்றனர். எனவே இப்பகுதி மக்கள் நலன் கருதி சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கிடப்பில் போடப்பட்ட சாலை அமைக்கும் பணியை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்