விபத்து ஏற்படும் அபாயம்

Update: 2025-08-03 12:59 GMT

அரியலூர் மாவட்டம் தா.பழூர் ஒன்றியம் வி.கைகாட்டியில் இருந்து ஸ்ரீபுரந்தான் வரை செல்லும் சாலையில் முத்துவாஞ்சேரி, சாத்தம்பாடி, கோவிந்தபுத்தூர், ஸ்ரீபுரந்தான் ஆகிய கிராமங்களில் தற்சமயம் சாலையின் ஓரங்களில் சோளம், கடலை போன்ற தானியங்களை அப்பகுதியை சேர்ந்தவர்கள் காய வைக்கின்றனர். இதனால் இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் செல்பவர்கள் ஒதுங்கிச் செல்ல முடியாமல் சிரமம் அடைந்து வருகின்றனர். மேலும் விபத்துகள் ஏற்படும் அபாயமும் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தானியங்களை சாலையில் காய வைப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்