தினத்தந்தி புகார் பெட்டிக்கு நன்றி

Update: 2025-08-03 12:58 GMT

புதுக்கோட்டை மாவட்டம், மேட்டுப்பட்டி கேட்டில் இருந்து புதுக்கோட்டை நகரப்பகுதிக்கு செல்லும் மருபிணி தார் சாலை அமைக்கப்பட்டு பல ஆண்டுகள் ஆனதால் ஆங்காங்கே சிதிலமடைந்து குண்டும், குழியுமாக காணப்பட்டது. இதனால் இந்த சாலை வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்பட்டு வந்தனர். எனவே இந்த சாலையை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். இது தொடர்பாக தினத்தந்தி புகார் பெட்டியில் செய்தி வெளியிடப்பட்டது. இதனை அறிந்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து மருபிணி சாலையை சீரமைத்தனர். இதற்கு செய்தி வெளியிட்ட தினத்தந்தி புகார் பெட்டிக்கும், நடவடிக்கை எடுத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கும் இப்பகுதி மக்கள் நன்றி தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்