நாகர்கோவில் 45-வது வார்டில் தொல்லவிளையில் இருந்து கோணம் செல்லும் சாலை உள்ளது. இந்த சாலையில் குருசடி அருகே சாலையின் நடுவே ஜல்லிகள் பெயர்ந்து பளளம் ஏற்பட்டு காணப்படுகிறது. இதனால், அந்த பகுதி மக்கள் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்காமல் இருக்க மரத்தடிகள், மரக்கிளைகளை வைத்துள்ளனர். இதன்காரணமாக இந்த சாலையில் போக்குவரத்து முற்றிலும் தடைபட்டுள்ளதால், வாகன ஓட்டிகள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே, சாலையில் ஏற்பட்டுள்ள பள்ளத்தை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ஜெயராம், மேலசூரங்குடி.