புதிய தார்ச்சாலை அமைக்கப்படுமா?

Update: 2025-07-27 12:18 GMT

ராமநாதபுரம் ஏ.ஆர்.மங்களம் ஊராட்சிக்குட்பட்ட வாகைக்குடி பகுதியில் பல ஆண்டுகளுக்கு முன்பு  தார் சாலை போடப்பட்டது. அச்சாலை தற்போது சேதமடைந்து மிகவும் மோசமான நிலையில் உள்ளதோடு போக்குவரத்துக்கு லாயக்கற்ற வகையில் உள்ளது. இதனால் அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள், பள்ளி மாணவர்கள் மற்றும் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமம் அடைகின்றனர். மேலும் மழை காலங்களில் தண்ணீர் நிரம்பி சாலை முழுவதும் சகதிகாடாக மாறிவிடுகின்றன. எனவே மாவட்ட நிர்வாகம் விரைந்து மேற்கண்ட பகுதியில் புதிய தார்ச்சாலை அமைத்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.


மேலும் செய்திகள்