குண்டும், குழியுமான சாலை

Update: 2025-07-27 12:09 GMT

அரியலூர் நகரின் முக்கிய பகுதியில் யூனியன் அலுவலகம் அமைந்துள்ளது. இந்த யூனியன் அலுவலகத்திற்கு முன்பு உள்ள சாலையில் ஏராளமான இருசக்கர, நான்கு சக்கர வாகனங்கள் சென்று வருகின்றன. இதனால் இந்த சாலை எப்போதும் பரபரப்பாக காணப்படும். இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன் இந்த சாலையில் பள்ளம் ஏற்பட்டு குண்டும், குழியுமாக காட்சியளிக்கிறது. இதனால் வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் கடும் அவதிப்பட்டு வருகின்றனர். மேலும் வாகன ஓட்டிகள் பலரும் நிலைத்தடுமாறி கீழே விழுந்து வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து இந்த சாலையை சீரமைக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்