அஞ்சுகிராமம் பஸ் நிலையத்தின் அருகில் வசந்தம் காம்பவுண்டு, ரோஸ் காம்பவுண்டு என 2 தெருக்கள் எதிர் எதிரே நாகர்கோவில் செல்லும் சாலையில் உள்ளது. மக்கள் நெருக்கடி மிகுந்த இந்த பகுதியில் செல்லும் வாகனங்கள் அதிவேகமாக செல்வதால் அடிக்கடி விபத்துகள் நிகழ்ந்து உயிர் இழப்புகள் ஏற்பட்டு வருகிறது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பஸ் நிலையத்தின் அருகில் சாலையில் வேகத்தடை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டு்ம்.