அகஸ்தீஸ்வரம் பேரூராட்சிக்கு உட்பட்ட வெள்ளையன்தோப்பு-கன்னிமார் குளம் நெடுஞ்சாலையில் ஈச்சன்விளை உள்ளது. இந்த பகுதியில் மழை நேரங்களில் சாலையில் தண்ணீர் தேங்கி நிற்கிறது. மேலும், அந்த மழைநீர் வடிந்தோட வழியின்றி நிற்பதால் கொசுக்கள் உற்பத்தியாகி சுகாதார சீா்கேடு ஏற்படுகிறது. இதனால் அந்த வழியாக செல்லும் பாதசாரிகள், வாகன ஓட்டிகள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே, பாதசாரிகள் நலன்கருதி சாலையோரத்தில் வடிகால் ஓடை அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.