திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை, காக்கவாக்கம் பகுதியில் உள்ள கூட்டுறவு கடன் சங்கம் அலுவலகம் எதிரே தொளவேடு சாலை உள்ளது. இந்த சாலை குண்டும், குழியுமாக உள்ளதால் வாகன ஓட்டிகள் அவதிப்பட்டு வருகின்றனர். மேலும், மழை காலங்களில் சாலைகளில் தண்ணீர் தேங்குவதால் பொதுமக்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மக்களின் நலன் கருதி அந்த பகுதியில் புதிய சாலை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.