மேலப்பெருவிளை பகுதியில் உள்ள கால்வாய்யை தூர்வாரி கழிவுகளை சாலையோரத்தில் கொட்டி உள்ளனர். ஒரு மாதமான பிறகும் இதுவரை கழிவுகள் அகற்றப்படாமல் காணப்படுகிறது. இதனால், அந்த பகுதியில் துர்நாற்றம் வீசி சுகாதார சீர்கேடு ஏற்படுவதால் அந்த வழியாக செல்லும் பொதுமக்கள், பள்ளி மாணவர்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே, பொதுமக்கள் நலன்கருதி சாலையோரத்தில் கொட்டப்பட்டுள்ள கழிவுகளை அகற்றிட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ரெக்ஸ், மேலப்பெருவிளை.