திருவள்ளூர் மாவட்டம், திருவாலங்காடு பகுதியிலிருந்து தொழுதாவூரில் இருந்து மணவூர் செல்லும் சாலையை ஏராளமான பொதுமக்கள் பயன்படுத்தி வந்தனர். இந்த சாலையை புனரமைப்பதற்காக சில ஆண்டுகளுக்கு முன்பு ஜல்லி கற்களை கொண்டு நிரப்பினர். ஆனால் இன்றுவரை அதற்கான பணிகள் கிடப்பில் போடப்பட்டுள்ளது. இதனால் இந்த சாலையை பொதுமக்கள் பயன்படுத்த முடியாதநிலை ஏற்பட்டுள்ளது. எனவே சம்பந்தப்பட்ட மாநகராட்சி அதிகாரிகள் சாலையை சீரமைக்க உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும்.