சேதமடைந்த சாலை....

Update: 2025-07-13 12:55 GMT

திருவள்ளூர் மாவட்டம், மாதவரம்-செங்குன்றம் சாலை ராட்சத பள்ளங்களுடன் குண்டும், குழியுமாக கடுமையாக சேதமடைந்து காணப்படுகிறது. இதனால் வெயில் நேரத்தில் புழுதி பறக்கிறது. மழை பெய்தால் சேறும், சகதியுமாக மாறிவிடுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் கடுமையான சிரமம் அடைந்துவருகின்றனர். சாலையின் இந்தநிலையால் பள்ளி-கல்லூரிகளுக்கு செல்வோர், வேலைக்கு செல்வோர் குறித்த நேரத்திற்கு செல்ல முடியாமல் அவதி அடைகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சாலையை சீரமைக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.


மேலும் செய்திகள்