பழுதடைந்த சாலை

Update: 2025-07-13 10:43 GMT

கோவையை அடுத்த வெள்ளக்கிணறு ரெயில்வே கேட் முதல் வி.சி.வி. அரசு மேல்நிலைப்பள்ளி வரை சுமார் 2 கிலோ மீட்டர் தூரத்துக்கு சாலை பழுதடைந்து கிடக்கிறது. அந்த வழியாக பள்ளி மாணவ-மாணவிகள் சைக்கிள்களில் சென்று வருகின்றனர். அத்துடன் பிற இருசக்கர, நான்கு சக்கர வாகனங்களும் சென்று வருகின்றன. ஆனால் சாலை மோசமாக இருப்பதால், அவதிப்பட நேரிடுகிறது. எனவே அந்த சாலையை சீரமைக்க வேண்டும்.

மேலும் செய்திகள்