கோவையை அடுத்த இடிகரையில் இருந்து பெரியநாயக்கன்பாளையம் செல்லும் சாலையில் பாலம் கட்டும் பணி கடந்த 8 மாதங்களுக்கு மேலாக தொடர்கிறது. அதற்கு மாற்றுப்பாதையான சரவணா கார்டன் வழியாக செல்லும் மண் சாலை மழையால் சேறும், சகதியுமாக கிடக்கிறது. இதனால் அந்த பாதையை பயன்படுத்துவதில் பல்வேறு சிக்கல்கள் உள்ளது. அதே நேரத்தில் பாலம் அமைக்கும் பணியும் ஆமை வேகத்தில் நடைபெறுகிறது. எனவே விரைவில் பாலம் அமைக்கும் பணி முடித்து பொதுமக்கள் பயன்பாட்டுக்கு ெகாண்டு வர வேண்டும்.