மதுரை வார்டு எண் 40 ஆவின் நகர் முதல் மெயின் ரோட்டில் உள்ள வளைவு பகுதியில் வேகத்தடை இல்லை. இதன் காரணமாக அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் அதிவேகத்தில் செல்கின்றனர். இதனால் அப்பகுதியில் வரும் பிற வாகன ஓட்டிகள், பள்ளிக்கு செல்லும் குழந்தைகள், பொதுமக்கள் ஆகியோர் அச்சமடைவதோடு அடிக்கடி விபத்தில் சிக்கி வருகின்றனர். எனவே விபத்துகளை தவிர்க்க அப்பகுதியில் வேகத்தடை அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.