திருவள்ளூர் மாவட்டம், கிளாம்பாக்கம் கிராமம் வழியாக செல்லும் அகரம் கண்டிகை இணைப்பு சாலையை ஏராளமான பொதுமக்கள் பயன்படுத்தி வருன்றனர். இந்த சாலைதான் ஆயலூர், கோயம்பாக்கம் கிராமங்களுக்கு செல்லும் முக்கிய சாலையாகவும் உள்ளது. சேறும் சகதியுமாக காணப்படும் இந்த சாலையால் வாகன ஒட்டிகள் மிகவும் அவதி அடைகின்றனர். பலநேரங்களில் விபத்துகளும் ஏற்படுவதால் வாகன ஓட்டிகளின் நலன் கருதி மாநகராட்சி நிர்வாகம் இந்த சாலையை சீரமைக்க உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும்.