திருவள்ளூர் மாவட்டம், சோழவரம், அலமாதி ஊராட்சிக்கு உட்பட்ட திருவள்ளுவர் தெரு மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதிகளில் சாலைகள் குண்டும் குழியுமாக காட்சி அளிக்கிறது. இதன் வழியாக செல்லும் வாகனங்கள் அடிக்கடி விபத்துகளுக்கு உள்ளாகின்றனர். மேலும், மழைக்காலங்களில் சாலையில் நீர் தேங்கி குளம் போலவும் காட்சியளிக்கிறது. எனவே, நகராட்சி நிர்வாகத் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து புதிய தார்சாலை அமைக்க வேண்டும்.