சேதமடைந்த சாலை

Update: 2025-07-06 10:24 GMT

சிவகங்கை மாவட்டம் இளையான்குடி தாலுகா துகவூர் ஊராட்சி மற்றும் சின்ன துகவூர் கிராமத்தில் இருந்து பள்ளி, கிராம நிர்வாக அலுவலகம், ஊருணி மற்றும் மையானம் ஆகியவற்றுக்கு செல்லும் சாலைகள் முற்றிலும் சேதமடைந்து குண்டும், குழியுமாக உள்ளது. இதனால் இந்த சாலைகள் அனைத்தும் போக்குவரத்துக்கு பயனற்ற நிலையில் இருப்பதால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமமடைகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து சேதமடைந்த சாலைகளை சீரமைக்க வேண்டும்..

மேலும் செய்திகள்