கொட்டாரத்தில் இருந்து அகஸ்தீஸ்வரம் செல்லும் சாலையில் வடுகன்பற்று உள்ளது. இந்த பகுதியில் இருந்து ஒரு சாலை பிரிந்து கரும்பாட்டூருக்கு செல்கிறது. வடுகன்பற்றில் ஒரு நிழற்குடை உள்ளது. இந்த நிழற்குடையின் தெற்கு பகுதியில் உள்ள பக்கச்சுவரானது கரும்பாட்டூரில் இருந்து வடுகன்பற்று நோக்கி வரும் வாகன ஓட்டிகள் கொட்டாரத்தில் இருந்து வரும் வாகனங்களை சரியாக பார்க்க முடியாத நிலையில் உள்ளது. இதனால் அந்த வழியாக வரும் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நிழற்குடையின் தெற்கு பகுதியில் உள்ள பக்கச்சுவரை இடித்து அகற்றிட நடவடிக்கை எடுக்க வேண்டும்.