வாகன ஓட்டிகள் அவதி

Update: 2025-06-29 11:20 GMT

கோவை அருகே துடியலூரில் இருந்து கணுவாய் செல்லும் சாலை மற்றும் ஜி.என்.மில்ஸ் பகுதியில் இருந்து கே.என்.ஜி. புதூர் செல்லும் சாலை ஆகியவை மிகவும் பழுதடைந்து மோசமான நிலையில் காட்சி அளிக்கின்றன. இதனால் அந்த வழியே சென்று வரும் வாகன ஓட்டிகள் மற்றும் பாதசாரிகள் கடும் அவதிப்பட்டு வருகிறார்கள். மேலும் விபத்துகளும் அதிகரித்து வருகிறது. எனவே அந்த சாலையை உடனடியாக சீரமைத்து தர சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் முன்வருவார்களா?

மேலும் செய்திகள்

சாலை பழுது