பொதுமக்கள் அவதி

Update: 2025-06-15 10:33 GMT

திருவள்ளூர் மாவட்டம், பூந்தமல்லி சென்னீர்குப்பம் முதல் பாரிவாக்கம் யூனியன் சாலை வரை உள்ள சாலை குண்டும், குழியுமாக உள்ளது. இதனால் அந்த பகுதி மக்கள் சாலையை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும், மழை நேரங்களில் சாலையில் உள்ள பள்ளத்தில் தண்ணீர் தேங்கி கிடப்பதால் அடிக்கடி விபத்து ஏற்படுகிறது. எனவே, மாநகராட்சி அதிகாரிகள் சாலையை உடனடியாக சீரமைக்க உரிய நடவடிக்கை வேண்டும்.

மேலும் செய்திகள்