கூடலூர் நகராட்சி 11-வது வார்டு இடையர்தெருவில் கடந்த மாதம் குடிநீர் குழாய் சீரமைப்பு பணிக்காக பள்ளம் தோண்டப்பட்டது. பின்னர் பணிகள் முடிந்ததும் பள்ளத்தை முழுமையாக மூடாமல் விட்டுவிட்டனர். இதனால் அந்த பகுதி மேடு, பள்ளமாக காட்சியளிக்கிறது. மேலும் இரவில் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் பள்ளம் இருப்பது தெரியாமல் விபத்தில் சிக்குகின்றனர். எனவே பள்ளத்தை விரைந்து மூட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
