மதுரை வில்லாபுரம் எச்.பி. காலனி பகுதியில் உள்ள பஸ் நிறுத்தம் பகுதியில் சாலை முற்றிலுமாக சேதமடைந்து குண்டும், குழியுமாக காணப்படுகிறது. மேலும் சிறுமழை பெய்தாலும் சாலை முழுவதும் தண்ணீர் தேங்கி சேறும், சகதியுமாக காட்சியளிகக்கிறது. இதனால் நடந்து செல்லும் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமம் அடைகின்றனர். சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.