சாலையில் குப்பைகள்

Update: 2025-05-25 13:56 GMT

செங்கல்பட்டு மாவட்டம், கூடுவாஞ்சேரி டீக்கடை பஸ் நிறுத்தம் ஜி.எஸ்.டி.சாலை அருகில் குப்பை குவித்து வைக்கப்பட்டுள்ளது. சாலை அருகில் குப்பை குவித்து வைக்கப்பட்டுள்ளதால் அதிக அளவு துர்நாற்றம் வீசுகிறது. இந்த சாலை பிரதான சாலை என்பதால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் தொடர்ச்சியாக பயன்படுத்தி வருகின்றனர். குப்பைகளால் அனைவரும் நோய் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் குப்பையை அகற்றவும், குப்பை கொட்டுவதை தடுக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்

சாலை பழுது