திருவள்ளூர் மாவட்டம், திருவேற்காடு பள்ளிக்குப்பம் பகுதியில் ஏராளமான குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் உள்ள ராஜீவ் நகர் 4,5,6,-வது குறுக்கு தெருக்களில் புதிய சாலை அமைப்பதற்காக 6 மாதங்களுக்கு முன்பு ஜல்லி, மணல் கொட்டப்பட்டது. ஆனால் இப்போதுவரை சாலை அமைக்க எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால் அந்த பகுதியில் உள்ளவர்கள் கடும் சிரமத்தை அடைகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட நகராட்சி அதிகாரிகள் சாலை அமைக்க உடனடி நடவடிக்கை எடுக்கவேண்டும்.