வேகத்தடைகள் அமைக்கப்படுமா?

Update: 2025-05-25 11:34 GMT

திருச்சி மாவட்டம் முசிறி வட்டம் திருச்சி-துறையூர் சாலையை இணைக்கும் வகையில் உள்ள சிறுகுடி-புலிவலம் சாலையில் வேகத்தடை அமைக்கப்படாமல் உள்ளது. இதனால் இந்த சாலை வழியாக வாகனங்கள் அதிவேகமாக சென்று வருகின்றன. இதனால் இப்பகுதியில் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து, இந்த சாலைகள் சந்திக்கும் பகுதிகளில் வேகத்தடை அமைக்க வேண்டும். இதேபோல் குருவிக்காரன்குளம் பிரிவு சாலையிலும் வேகத்தடை அமைக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்