மயிலாடுதுறை மாவட்டம் வாழவராயன்குப்பம் -கப்பூர் சாலையில் மழைக்காலங்களில் மழைநீர் தேங்கி நிற்கிறது. இதனால் அந்த வழியாக செல்பவர்கள் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். மாணவ -மாணவிகள்,வேலைக்கு செல்பவர்கள் மழை நீரில் நடந்து செல்லும் சூழல் ஏற்படுகிறது. தேங்கி கிடக்கும் மழை நீரில் கொசுக்கள் உற்பத்தியாகி சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்துகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் உள்ள சாலையில் மழைநீர் தேங்காமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.