மேல்மலையனூர் அருகே சாத்தாம்பாடி ஏரிக்கரை சாலை உள்ளது. இந்த சாலையின் ஓரத்தில் தடுப்பு சுவர் இல்லாததால் அந்த வழியாக செல்லும் வாகனங்கள் எதிர்பாராதவிதமாக சாலையோர பள்ளத்தில் கவிழும் சூழ்நிலை உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் ஒருவித அச்சத்துடனேயே சாலையில் செல்கின்றனர். இதை தவிர்க்க சாலையோரம் தடுப்பு சுவர் அமைக்கவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.